துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த 4 ஆயிரம் பொறியல் பட்டதாரிகள் – தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்

446
engineering

தமிழக அரசின் 14 துப்புரவு பணிக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வெளியே வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. எனவே, அவர்கள் கிடைக்கும் வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் 10 பெருக்குபவர்கள், 11 துப்புரவு பணியாளர்கள் பணியாளர்கள் என 14 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பி.இ. எம்.இ. பி.டெக். எம்.டெக் என பொறியியல் பட்டதாரிகள் சுமார் 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு கடந்த 23ம் தேதி முதல் நேர்காணல் பணியும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

படிப்பறிவே தேவையில்லாத துப்புரவாளர் பணிகளுக்கெல்லாம் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள் எனில் நாட்டில் எவ்வளவு வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

பாருங்க:  உற்சாகத்தில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் யார் வந்திருக்கா பாருங்க - வீடியோ