நடிகர் சாந்தனு தீவிர விஜய் ரசிகர். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு கொரோனா காலங்களில் குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.
பின்பு மாஸ்டர் படத்தின் பாடலுக்கு டான்ஸ் ஆடி வெளியிட்டார். தற்போது எங்க போறடி என்ற ஆல்பம் சாங்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தில் அவரது மனைவியும் தொகுப்பாளினியுமான கிகி விஜய் நடித்துள்ளார்.
தரண்குமார் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தை நடனம் அமைத்து இயக்கி இருப்பவர் பிருந்தா கோபால்.
பாடலை எழுதியவர் ஆர்ஜே விஜய்.