கடந்த 2018 நவம்பர் நவம்பர் 29ல் வெளியான திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மறுபாகமான 2.0 திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் , அக்சய்குமார் முதலானோர் நடித்திருந்தனர்.
அக்சய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சிறப்பான முறையில் ஓடியது. இப்படம் 3டியிலும் பார்க்கும் அளவு தொழில்நுட்பத்துடன் வந்திருந்தது. பலர் இப்படத்தை 3டி கண்ணாடி அணிந்து பார்த்தனர்.
இப்படத்தில் ரகுமான் இசையில் இடம்பெற்ற இந்திரலோகத்து என்ற பாடல் 2 வருடங்கள் கழித்து இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இப்பாடலின் வீடியோவை 87 ஆயிரம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.