Corona (Covid-19)
ஊழியர்கள் வரும் திங்கள் முதல் பணிக்கு வர வேண்டும்! தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு!!
கொரொனா பரவலால், ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ஆம் தேதியில் முடிவடையுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் மே 17ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கில் தற்போது நிலவிவரும் தளர்வுகளை காட்டிலும் இன்னும் சில தளர்வுகள் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் இதுவரை, போக்குவரத்துகள், கல்வி நிலையங்கள் குறித்த எந்தவொரு முறையான அறிவிப்புகளும் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கபடவில்லை. கடைசியாக வந்த அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு பொதுதேர்வு மட்டும் வரும் ஜீன் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரிய பொதுநல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது, இதனை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், ஊழியர்கள் வரும் திங்கள் முதல் பணிக்கு வர வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் வரும் திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.