cinema news
டுவிட்டரில் எமோஜி வெளியிட்ட ஜகமே தந்திரம் படக்குழு
தனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 18ம் தேதி ஜகமே தந்திரம் படம் வெளியாக இருக்கிறது. தனுஷ் , ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படம் தியேட்டரில் வெளியாக தற்போது வாய்ப்பு இல்லை என்பதால் நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரமோஷனுக்காக புதிய யுக்திகளை கையாளுகின்றனர். அதன்படி தனுஷின் மீசை கெட்டப்பை எமோஜியாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.