கமல்ஹாசன் நடித்த எல்லாம் இன்ப மயம் திரைப்படம் வெளிவந்து நேற்றுடன் 39 ஆண்டுகள் ஆகின்றன. இப்படத்தில் கமல்ஹாசன்,ஜெய்சங்கர், மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சாதாரண கமர்சியல் படம்தான் இது கமல்ஹாசன் வித்தியாசமான வேடங்களில் கலக்கி இருந்தார். சேரிப்பகுதியில் இருக்கும் ஒரு கெட் அப்பில் இப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாமன் வூடு மச்சு வூடு என்ற பாடல் மிக புகழ்பெற்ற பாடலாக வந்தது.
இளையராஜா இப்படத்துக்கு சிறப்பான பின்னணி இசையையும் பாடல்களையும் அமைத்து கொடுத்தார்.
ஜி.என் ரங்கராஜன் இயக்கிய இப்படம் கமல்ஹாசன் நடித்த சிறந்த கமர்ஷியல் திரைப்படங்களில் ஒன்றாகும்.

