Entertainment
நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே- லேட்டஸ்ட் டிரெண்ட்
திரையரங்கம் தாண்டி ஓடிடியில் படங்கள் வெளியாகி வருவது தற்போதைய டிரெண்ட். அதையும் தாண்டி ஒரு சில படங்கள் நேரடியாக டிவியிலிலேயே வெளிவந்து விடுகின்றன.
சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி என்ற படம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. அதைப்போல சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம், ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் இந்த படத்தை ஓடிடியில் 30 நாட்களுக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என உத்தரவாதம் கேட்டனர். உத்தரவாதம் தயாரிப்பு தரப்பில் இருந்து அளிக்கப்படாத நிலையில் இந்த படம் வரும்28-ம் தேதி அன்று மதியம் 3-ம் மணிக்கு விஜய் ஒளிபரப்பாகிறது ‘ஏலே’ திரைப்படம்.
