Latest News
தேர்தலில் போட்டி இட விருப்ப மனு அளிக்கலாம்- கமல்
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் எல்லா அரசியல் தலைவர்களும் ஊர் ஊராக அடிக்கடி சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என கூறியுள்ளார்.
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.
