Latest News
வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்- ஆவலில் மக்கள்
தமிழக சட்டசபை தேர்தல் களம் பல வருடங்களுக்கு பிறகு மிக பரபரப்பாய் காணப்படுகிறது. இதற்கு காரணம் பல வருடமாய் கலைஞர், ஜெயலலிதா என்று இருந்த இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்துள்ளது. முதல்முறையாக எடப்பாடியா ஸ்டாலினா என்ற போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் ஸ்டாலின் பெரிய அளவில் வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனென்றால் கடந்த 10 வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லை. இப்போதாவது ஆட்சி அமைக்குமா என்று தெரியவில்லை.
அதிமுகவும் பலத்த வலிமையோடு திமுகவோடு மோதியுள்ளது. ஜெயலலிதா இல்லாத முதல் சட்டசபை தேர்தல் என்பதால் இதில் வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடியும் இருக்கிறார்.
இப்போதே அனைத்து இடங்களிலும் தேர்தல் ரிசல்ட் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தேர்தல் களமும் மக்கள் மனமும் பரபரப்பு அடைந்துள்ளது.