பிரபல திரைப்பட அதிபர் ஏக்நாத் காலமானார்

பிரபல திரைப்பட அதிபர் ஏக்நாத் காலமானார்

80களில் பல பிரபலமான திரைப்படங்களை தயாரித்தவர் ஏக்நாத். இவர் தயாரிப்பாளர் என்பதை விட வீடியோ கேசட் அதிபர் என சொல்லலாம். அந்த நேரத்தில் ஏக்நாத் வீடியோதான் பிரபலம்.

சில படங்களின் காப்பி ரைட்ஸ் ஏக்நாத்திடம் தான் இருந்தது. அவர்களது வீடியோதான் அதிகாரப்பூர்வமான படங்களாக கடைகளில் கிடைத்தது. 80, 90களில் ஏக்நாத் வீடியோக்களின் கேசட்டுகள் தான் பலருக்கு பொழுதுபோக்கு ஆக இருந்தது. விசிஆர் எனப்படும் கருவியில் ஏக்நாத் வீடியோவின் ரஜினி, கமல் படங்களை பார்ப்பது குஷியாக இருக்கும்.

ஏக்நாத் பவுனு பவுனுதான், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் சன் டிவியில் 2000த்திற்கு பின் வந்த சில சீரியல்களையும் ஏக்நாத் நிறுவனம் தயாரித்துள்ளது.