பிரதமர் மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள் ஆகும். இதை ஒட்டி பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், பாரதிய ஜனதா தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் என வாழ்த்து மழையில் பிரதமர் மோடி நனைந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் நல்ல உடல் நலத்துடன் பிரதமர் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.