நிருபரிடம் கோபமடைந்த முதல்வர்

24

நீட் தேர்வு சம்பந்தமாக பேட்டி கொடுத்த முதல்வர் பல தடைகளைத்தாண்டி உருவாக்கப்பட்ட 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்நாள் என்வாழ்வில் மகிழ்ச்சியான நாள்; அரசுப்பள்ளியில் படித்தவன் என்றமுறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய நாள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதே கருத்தை தனது நிருபர்கள் சந்திப்பிலும் கூறினார். மேலும் நீட் தேர்வை தமிழ்நாடு மட்டும்தான் எதிர்த்து போராடி வருகிறது மற்ற மாநிலத்தவர்கள் போராடவில்லை. திமுக காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என கூறினார்.

தான் கொண்டு வந்த 7.5 மருத்துவ இட ஒதுக்கீடு பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கும்போது , பெருமை பேசறிங்களா என ஒரு நிருபர் கேட்டவுடன் கோபப்பட்டு பாதியில் பேட்டியை முடித்து விட்டு கிளம்பினார்.

https://www.facebook.com/WINNEWS.IN/videos/2381415528671384

பாருங்க:  மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி