Connect with us

அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்

Latest News

அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து காளவாசல் வழியாக திருப்பூருக்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற ஓட்டுநர் வண்டியை ஓட்டினார்.

அதன் பின்புறமாக வந்த கார் ஒன்று அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக சொல்லப்படும் நிலையில் டிரைவரால் வழிவிட முடியாததால் திடீரென அரசு பேருந்தை முந்தி சென்று அரசு பஸ் டிரைவரிடம் கார் டிரைவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அரசு பஸ் டிரைவர் மீது பாய்ந்த கார் ஓட்டுநர் அரசு பஸ் ஓட்டுநரை தாக்கினார். பேருந்தின் கண்ணாடியை கார் ஓட்டுநர் அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர், பேருந்து ஓட்டு முத்துகிருஷ்ணனை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்த காவல்துறையினர், பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி, சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

More in Latest News

To Top