கோட் சூட்டில் டிப் ஆப் எடப்பாடி பழனிச்சாமி – வைரல் புகைப்படங்கள்

0
65

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் அணிந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் ஒப்பந்தங்களை அவர் பெற்றுவருவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவர் வேட்டி, சட்டையிலிருந்து கோட் சூட்டிற்கு மாறி முக்கிய பிரமுகர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவருடன் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.