Connect with us

எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் ? – விபரங்கள் இதோ

Tamil Flash News

எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் ? – விபரங்கள் இதோ

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.

துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் ஒப்பந்தங்களை அவர் பெற்று வந்துள்ளார் என அதிமுக தரப்பில்கூறப்பட்டது.

ஆனால், அவரின் பயணத்தால் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை என சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறினர். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் பெற்ற முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

இந்நிலையில், முதல்வரின் பயணத்தின் போது செய்த புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தில் சுற்றுப்பயணம் செய்ததன் மூலம், SD link LLC நிறுவனத்தில் இருந்து ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.லிங்கே டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எமர்சன், ஜீன் மார்டின், அக்வில் சிஸ்டம், ச்கிட்டஸ் ஃபார்மா சர்வீஸ், நொவிட்டியும், ஜோகோ ஹெல்த், ஆஸ்பையர் கன்சல்டிங், ஸில்லியான் டெக்னாலஜி, பிஸோஃபோர்ஸ், நூர்ரே கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 730 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 ஆயிரத்து 660 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சான் பிரான்சிஸ்கோ பயணத்தில், வேரபல் மெம்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,500 கோடி ரூபாய்க்கு கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம்,1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஹோட்டல்ஸ் மூலம் 1,300 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பாருங்க:  நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

இதுதவிர, கேப்பிசாஃப்ட், இசட் எல் டெக்னாலஜீஸ், ரைப்.ஐஓ, கால்டன் பையோ டெக், லின்கன் எலெக்ட்ரிக், கிலெளட் லேர்ன், சியர்ரா ஹெல்த் அலெர்ட்ஸ், ஏசிஎஸ் கிளோபல் டெக் சொல்யூஷன்ஸ், டாட் சால்வ்ட் சிஸ்டம்ஸ், லேடண்ட். ஐ, அச்சிரியம், நேட்சர் மில்ஸ், சாய் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 505 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 3 ஆயிரத்து 760 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

துபாய் நகரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம், டிபி வேல்ட்டு இன்டிகிரேடட் பிசினஸ் பார்க் பி., லிட் நிறுவனத்தில் இருந்து 1000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம், 1100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜெயன்டி இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூலம் 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் 41 நிறுவனங்களுடன் ரூ. 8,835 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் ரூ. 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in Tamil Flash News

To Top