Tamil Flash News
மின் கம்பம் உடைந்து விழுந்து மின்சார வாரிய ஊழியர் பலி
சிவகாசி செங்கமழ நாச்சியார்புரம் மின் பிரிவு அலுவலகத்தில் மின் ஊழியராக பணி புரிபவர் காளிராஜன். இவர் திருத்தங்கல் கண்ணகி நகர் பகுதியில் சிமெண்ட் மின் கம்பங்களை புதிதாக நடும் பணியில் ஈடுபட்டார். அப்போது சிமெண்ட் மின் கம்பம் உடைந்து விழுந்தது.
இதனால் நிலைகுலைந்த இவர் உயிரிழந்தார். இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருடன் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
