சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் திரையில் களம் காண இருக்கிறது. சிம்புவுக்கு நீண்ட நாளைக்கு பிறகு வரும் கமர்ஷியல் படம் இதுவாகும்.
இந்த படத்தை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளார். நடிகர் சிம்புவும் கோவில் கோவிலாக ஆன்மிக மணத்துடன் சென்று கொண்டிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கும் இந்த படத்தின் டீசர் நாளை காலை 4.30க்கு வெளிவருகிறது. வழக்கமாக இது போல டீசர்கள் பகல் பொழுதிலோ மாலை 6 மணிக்கோ தான் வெளிவரும் நாளை தீபாவளி நல்ல நாள் என்பதால் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4மணிக்கு எல்லாம் ஈஸ்வரன் பட டீசர் வெளிவருகிறது.