செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் மிக புகழ்பெற்ற ஊராகும் இங்குள்ள வேதகிரீஸ்வர் கோவில் மிக புகழ்பெற்ற கோவிலாகும்.
இங்கு மலையை சுற்றி கிரிவலம் வருதல் சிறப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. இக்கோவிலில் புனித குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித சங்கு தோன்றுகிறது.
மேலும் இங்கு பூஷா, விருத்தா என்ற முனிவர்களை இறைவன் சபித்து கழுகுகளாக உருமாற்றியதாக நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இக்கோவில் உள்ளது. இந்த ஊரின் பெயரும் உள்ளது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஆண்டுகளாக இரண்டு கழுகுகள் கோவிலுக்கு குறிப்பிட்ட வேளைக்கு வந்து சாப்பிட்டு கொண்டு இருந்தன.
இந்த இரண்டு கழுகுகளும் 92ம் ஆண்டே தன் வருகையை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த கழுகுகள் சாப விமோசனம் அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்த கழுகுகளுக்கு கோவில் சார்பில் அந்த மலையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.