கொரொனா கொடூரங்களால் கடந்த இரண்டு வருடங்களாக சம்மர் வெக்கேஷன் லீவ் எனப்படும் கோடைகால விடுமுறை களைகட்டவே இல்லை. இதனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என குளு குளு பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் புரிவோர் பலர் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
பொதுமக்களும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை சென்று பார்க்க முடியாமல் தங்களது குடும்பத்தினருடன் அனுபவிக்க முடியாமல் வருத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பேரிடர் காலங்கள் முடிந்து அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இபாஸ் தேவையில்லை 50 சதவீத நபர்களே அனுமதிக்கப்படுவர் என்றும், பயணிகளின் விபரம் பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.