திமுக முன்னணி தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த் இவர் வேலூர் எம்.பியாக இருந்து வருகிறார். இவர்கள் அடிக்கடி வேலூர் அருகில் இருக்கும் மகாதேவ மலைக்கு சென்று அங்கிருக்கும் விபூதி சாமியாரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பெரிய பதவியில் அமருவார் என சாமியார் கணித்து சொன்னாராம் அது படியே நடந்து விட்டதாம்.
இப்போது துரைமுருகனுக்கும் அருள்வாக்கு சொல்லி இருக்கிறாராம் சாமியார். விரைவில் உச்ச பதவியில் அமருவாய் என சாமியார் சொல்லி இருக்கிறாராம்.
அதனால் வரும் சட்டசபை தேர்தல் வெற்றி மூலம் தனக்கு உயர்பதவி ஏதாவது கிடைக்கும் என நம்பிக்கையில் துரைமுருகன் உள்ளார்.