திமுக பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவர் சில செய்தியாளர்களை மரியாதைக்குறைவாக பேசிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள துரைமுருகன் , நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை அப்படி பேசி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக பொதுச்செயலாளர் ஆனவுடன் நான் மிகுந்த கவனமுடன் செயல்படுவேன் என துரைமுருகன் கூறியுள்ளார்.
தான் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக கூட்டணி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சில வார்த்தை தவறாக வந்திருக்கலாம் என துரைமுருகன் கூறியுள்ளார்.
இருப்பினும் அவ்வாறு பேசி இருந்தால் வருத்தப்படுவதாக துரைமுருகன் கூறியுள்ளார்.