கொரொனா பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை அடுத்து, இந்தியளவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமலில்லுள்ளது, பாதிப்புகள் அதிகரிப்பால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 906 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் அதிகளவில் கொரானா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, கொரொனா பாதிப்பு அதிகரிப்பால் குறிப்பாக சென்னையில் அதிகரித்ததால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருக்கவும்; பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிடவும் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.