சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது அடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கமும் தயாராகுகின்றது.
தமிழகத்தை பொருத்தவரை, கொரொனாவின் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக, திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம் போன்ற இடங்களில் பாதிப்புகள் கட்டுக்குள் அடங்காமல் போகின்றது.
இதனையடுத்து, தினந்தோறும் கொரோனா தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று மட்டும் 759 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எகிறியுள்ளதால், அடுத்தக்கட்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகயுள்ளது. ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு, இதனையடுத்து இப்போது நேரு உள்விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இப்போது அதிக அளவிலான நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப் படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.