கொரொனா பீதியால், முன்று கட்டமாக அமலில்யிருந்த ஊரடங்கை காட்டிலும் நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் தளர்த்தப்படும் என்று அரசு தரப்பு கூறியிருந்தது.
அதனை தொடர்ந்து, அரசு பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும், வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, என படிப்படியாக தளர்வுகள் தொடங்கியுள்ளது. மேலும் வரும் ஜுன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்போவதாக இந்திய ரயில்வேத்துறை ரயில்களுக்கான அட்டவணையுடன் அறிவிப்பை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து உள்நாட்டு விமான சேவை துவக்குப்போவதாகவும், ஆனால் சில வழிமுறைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததுள்ளது.
அதன்படி, மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும், முதற்கட்டமாக உள்நாட்டு விமான சேவைக்கு பிறகு வெளிநாட்டு விமான சேவையை விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முதலில் தொடங்கயிருக்கும் உள்நாட்டு விமான சேவையில் பயணிகளுக்கான வழிமுறைகளை சுருக்கமாக காணலாம்.
பயணிகளும், அதிகாரிகளும் விமான நிலையம் வர போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து விமான பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.
பயணிகளும் தங்களது திறன்பேசிகளில் ‘ஆரோக்கிய சேது’ செயலிகளை பதிந்திருப்பது கட்டாயம், ஆனால் ஆரோக்கிய சேது பயன்பாடு 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை.
பயணிகள் முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை அணிந்திருப்பது அவசியம்.
பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும் போன்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.