Latest News
ட்ரோன் பறக்க முக்கிய இடங்களில் தடை
தமிழ்நாட்டில் ஐஎன்ஸ் பருந்து என்ற கடற்படை தளம் இராமநாதபுரம் உச்சிப்புளியிலும்,ஐஎனெஸ் கட்டபொம்மன் என்ற தளம் திருநெல்வேலியிலும், சென்னையில் ஐஎன் எஸ் அடையாறு, அரக்கோணத்தில் ஐ என் எஸ் ராஜாளி உள்ளிட்ட தளங்கள் உள்ளன.
இந்த தளங்களின் மீது ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ட்ரோன்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக டிஜிஸ்கை என்ற இணையதளத்தில் அப்ளை செய்து அனுமதி கிடைத்த உடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.