அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா மரணம்

33

அடையாறுவில் புற்றுநோய் மருத்துவமனையை துவக்கி புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தை ஏற்படுத்தி புற்றுநோய் ஒரு நோயல்ல அது எளிதில் குணப்படுத்தக்கூடியதுதான் என்ற நம்பிக்கை விதையை விதைத்தவர் மருத்துவர் சாந்தா.

தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என தினமும் பல ஆயிரம் புற்றுநோய் பாதித்த மக்கள் அடையாறு இன்ஸ்ட்யூட்டுக்குத்தான் படை எடுப்பர்.

புற்றுநோய் பாதித்த பலருக்கு கண்கண்ட கடவுளாக இருந்து பாதிப்பேரை புற்றுநோயில் இருந்து காத்தவர் மருத்துவர் சாந்தா. உலக அளவில் புற்றுநோய்க்கு வரும் நவீன மருந்துகளை உடனடியாக வரவைத்து செயல்படுத்தியவர் மருத்துவர் சாந்தா அவர்கள்.

இவர் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார் இவர் இழப்பு மருத்துவ உலகுக்கு ஒரு பேரிழப்பு என்றால் மிகையாகாது.

பாருங்க:  பிரபலங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புகைப்படங்கள்