மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர், முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

68

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சாந்தா. இவர் உலக அளவில் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை கூட உடனடியாக வரவைத்து குறைந்த செலவில் நிறைந்த சிகிச்சை கொடுத்தவர் மருத்துவர் சாந்தா அவர்கள்.

இவர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து காப்பாற்றியுள்ளதால் இந்திய அளவில் எல்லோருக்கும் தெரிந்த நபராவர்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , டாக்டர் சாந்தா புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை கொடுத்ததற்காக என்றும் நினைவு கூறப்படுவார் என்று கூறப்படுகிறது.

டாக்டர் சாந்தாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் திரு எடப்பாடி கூறியுள்ளார்.

துணை முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் சென்னை-அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சிறந்த சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். என கூறியுள்ளார்.

பாருங்க:  ஒவ்வொரு பூக்களுமே பாடகர் கோமகன் உயிரிழப்பு
Previous articleகெளதம் கார்த்திக் குறித்த சதீஷின் கலாய் பேச்சு
Next articleஎந்த நேரமும் எப்படி சமூக சிந்தனை- ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் பதில்