கடந்த 2004ம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கியதில் நாகை மாவட்டத்தில் அதிகமான பேர் உயிரிழந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உட்பட கடற்கரையோர நகரங்கள் அனைத்திலும் சுனாமி பேரலை தாக்கியதில் பலர் அழிந்தனர்.
சிலர் தாய் தந்தை உற்றார் உறவினர்களை இழந்து அனாதைகளாகினர். அப்படி அனாதைகள் ஆன சிறுமிகளை அப்போதைய நாகப்பட்டினம் கலெக்டரும் தற்போதைய சுகாதாரத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து படிக்க வைத்தார். அப்படி மீனா, செளமியா என்ற இரண்டு சிறுமிகளை படிக்க வைத்தார்
அப்படி படித்து நன்முறையில் வளர்ந்து திருமண பருவம் அடைந்த செளமியாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.