சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரிப்பில் டாக்டர் படம் உருவாகியுள்ளது. நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார் பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக தெரிகிறது.