Connect with us

ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

TASMAC explains the fake link

Corona (Covid-19)

ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

கொரொனா காரணமாக, இந்தியளவில் 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடக்கியுள்ளது தமிழக அரசு. இதில் மதுபான கடைகளும் அடங்கும். மதுபான கடைகள் மூடியதால் மது பிரியர்கள் பலர் டாஸ்மாக்கை திறக்ககோரி பல வலுவான கோரிக்கைகள் எழுப்பியதால், தமிழக அரசு கடந்த 7ம் தேதி மதுகடைகளை திறந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவால் மறுபடியும் டாஸ்மாக் மூடப்பட்டதுடன், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், அரசு தரப்பிலிருந்து ஆன்லைனில் மதுபான விற்பனை தொடர்பான முறையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்யலாம் என்ற லிங்க வேகமாக பரவி வருகின்றதை அறிந்த டாஸ்மாக் நிர்வாகம் “ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கவில்லை என்றும் ஆன்லைனில் மதுபானம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் லிங்க் போலியானது, ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்!” என்றும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது.

More in Corona (Covid-19)

To Top