உபியில் அப்பாவி டால்பினை கொன்ற அயோக்கியர்கள்

61

நீரில் வாழும் ஒரு அரிய வகை உயிரினம் டால்பின். டால்பின் துள்ளி குதித்து நீரில் ஆடுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். சிறு குழந்தைகள் கை தட்டி மகிழ்வார்கள்.

மீன் இனங்களில் ஒன்றான டால்பின் மிக சாதுவான பிராணி. இந்த டால்பினை சிலர் கொடூரமாக கொன்றுள்ளனர். இங்கல்ல இது நடந்தது உத்திரபிரதேசத்தில்.

உபியில் உள்ள கங்கை நதியில் துள்ளி குதித்து நீந்தி வந்த அழகிய டால்பினை சிலர் துடிக்க துடிக்க கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் சில தினங்களாக பிரபலமானது.

கடந்த 31ம் தேதி சிலர் டால்பினை கொன்றுள்ளனர். டால்பினை கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டு நவாபஞ்ச் போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

உபியில் டால்பின் கொல்லப்பட்டது விலங்கின ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  களத்தில் சந்திப்போம் ரிலீஸ் தேதி
Previous articleவாட்ஸப் புதிய கொள்கை- பயனாளர்கள் எதிர்ப்பு
Next articleஅழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா