ஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்

23

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு அப்பாவி நாயை மூன்று இளைஞர்கள் தூக்கி போட்டு இஷ்டத்துக்கு பந்தாடுகின்றனர்.

அந்த நாயை சிலர் தூக்கி போட்டு விளையாடுவதும் அந்த நாய் பதறி கொண்டும் பயந்து கொண்டு சென்றும் அதை விடாமல் தூக்கி தூக்கி கீழே போடுவதும் பார்க்கவே கொடூரமாக உள்ளது

இந்தக்காட்சி காண்பவர்கள் மனதை உருக்குகிறது. ஒரு வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்திய இளைஞர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ஏற்கனவே இதுபோல சென்னையில் குரோம்பேட்டையில் மாடியில் இருந்து நாயை தூக்கி போட  செய்த மருத்துவமாணவர்கள் சிலர் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  அபெக்ஸ் கம்பெனியில் செளந்தர்யா கொண்டாடிய ஆயுத பூஜை