Latest News
ஒவ்வொரு நாயும் குரைத்தால் அதற்கென தனியாக பதில் கொடுக்க முடியாது அண்ணாமலை ஐபிஎஸ் அதிரடி
பாரதிய ஜனதா கட்சியில் துடிப்புமிக்க இளைஞராக அதிரடியாக களமிறங்கி இருக்கிறார் அண்ணாமலை ஐபிஎஸ். கர்நாடக சிங்கம் என போற்றப்பட்ட இவர் தனது அதிரடியான ஐபிஎஸ் பணியை உதறி தள்ளிவிட்டு இப்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு துணைத்தலைவராக உள்ளார்.
இவரின் பேச்சும் மேடைகளில் நறுக்கு தெறித்தாற்போல் சரவெடியாக பேசுகிறார். சமீபத்தில் இவர் பேசிய பேச்சு ஒன்று சமூக வலைதள வைரலாகி வருகிறது.
என்னை விவாதத்துக்கு வருமாறு பல இடத்திலிருந்து எதிர்க்கட்சி நண்பர்கள் அழைக்கின்றனர். யாராவது தலைவர் என்றாலோ, எம்.எல்.ஏ, எம்.பியாக புதிதாக நிற்கிறவர் என்றாலோ விவாதம் செய்யலாம். எல்லாரிடமும் விவாதம் என்னால் செய்ய முடியுமா? தெருவில் எல்லா நாய்களும் வந்து ஒன்று சேர்ந்து நம்மை குரைக்கும் அதற்காக எல்லா நாயிடமும் நாம் பேசி விட முடியுமா என அதிரடியாக முழங்கியுள்ளார். உங்களுக்கு போரடிச்சா வீட்ல உட்கார்ந்து டிவியோ, மூவியோ பாரு எல்லாரையும் விவாதத்துக்கு வா வா என்று அழைக்காதே என அதிரடியாக பேசியுள்ளார்.
200 ரூபாய் கோமாளிகள் கலாய்த்து தள்ளிய தமிழக பாஜக துணைத்தலைவர் #அண்ணாமலை pic.twitter.com/t4ADRCbW6H
— Mediyaan News (@mediyaannews) September 24, 2020
200 ரூபாய் கோமாளிகள் கலாய்த்து தள்ளிய தமிழக பாஜக துணைத்தலைவர் #அண்ணாமலை pic.twitter.com/t4ADRCbW6H
— Mediyaan News (@mediyaannews) September 24, 2020