மனிதர்களை விட நாய் நன்றியுள்ளது என சும்மாவா சொல்கிறார்கள். ஒரு முறை நாய்க்கு உணவளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நண்பனாக மாறி விடும். உணவிட்டவருக்கு தன் நன்றியை செலுத்திக்கொண்டே இருக்கும்.
ஆனால் மனிதர்களுக்கு கொடுப்பது போல் பிரிவினைகளையும் வேதனைகளையும் ஆண்டவன் இது போல ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கொடுத்து விடுகிறார்.
சில நாட்களுக்கு முன் கேரளா மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி இறந்து போனவர்களின் நாய் ஒன்று தனது உரிமையாளரை தேடி அலைந்து திரிந்த செய்திகள் வெளிவந்து பரிதாபத்தை ஏற்படுத்தியது.
அதே போல் சமீபத்தில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அதிகம் பேர் காணாமல் போயினர் 10 பேர் பலியாகினர்.
இதனிடையே உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன ஒருவரின் நாய் தனது உரிமையாளரை தேடி அலைந்து வருகிறது . இது பார்ப்பவர்கள் கண்களை குளமாக்குகிறது.