நடிகர் விஜய் மற்றும் சிம்புக்கு டாக்டர் எழுதிய உருக்கமான கடிதம்

67

நடிகர் விஜய் மற்றும் சிம்பு நடித்த மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சமீபத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் இருந்த தியேட்டர்களை 100 சதவீதம் உயர்த்திக்கொள்ள அரசு சமீபத்தில்தான் அனுமதி அளித்தது.

இந்நிலையில் பொங்கலுக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால் இது குறித்து டாக்டர் ஒருவர் பொதுவில் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், ‘டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இந்த நோய் பரவலை தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதும் இல்லை, ஹீரோக்களும் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

இந்த கடித விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நடிகர்களே ஒரு சிலர் இந்த 100 சதவீத இருக்கைகள் விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாருங்க:  விஜய்,மற்றும் அவரது அப்பா சந்திரசேகரை கலாய்க்கும் மீம்ஸ்