Latest News
நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சுதீப் குப்தா என்ற மருத்துவரும் அவரது மனைவி சீமா குப்தா ஆகியோரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழிமறித்தனர்.
அப்போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அந்த மர்ம நபர்கள் மருத்துவ தம்பதியினரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலையை நிகழ்த்தி விட்டு மிக சாதாரணமாக மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஏறி திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் அர்ஜுன் குமார் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவர் சுதீப் குப்தா ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த பெண்ணுக்கு 6 மாத குழந்தை இருந்ததாகவும் அவர்கள் 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் காவலர்கள் கூறுகின்றனர்.
அது சம்பந்தமான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.