cinema news
டாக்டருக்கு குவியும் கூட்டம்- விஜய் ரசிகர்கள்தான் காரணமா
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டாக்டர்.
இந்த படம் வெளியாகும் வெளியாகும் என நீண்ட நாட்கள் ரசிகர்கள் காத்திருந்தனர். ஓடிடியில் இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது இறுதியில் இப்படம் தியேட்டரில் தான் வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் உறுதியாக இருந்தார்.
தியேட்டர் திறந்து சில மாதங்களுக்கு பின் பெரிய ஹீரோ நடித்து வெளிவரும் முதல் படம் இது என்பதால் கூட்டம் தியேட்டர்களில் அதிகம் உள்ளது.
மற்றொரு பக்கம் நெல்சன் திலீப்குமார் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருவதால் விஜய் ரசிகர்களும் இப்படத்தை காண குவிந்து வருகின்றனர்.