சாலையில் படுத்திருந்த தெருநாய் மீது வேண்டும் என்றே காரை விட்டு ஏற்றிய நபர்

சாலையில் படுத்திருந்த தெருநாய் மீது வேண்டும் என்றே காரை விட்டு ஏற்றிய நபர்

மனிதர்களுக்கு வன்ம உணர்வு பல விசயங்களில் அதிகரித்து வருகிறது. என்ன செய்கிறோம் என தெரியாமலே பலவிதமான பாவங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அதிலும் வாயில்லா ஜீவன்கள் மீது சிலர் நடத்தும் கொடூர தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது.

பெங்களூருவில் சாலையோரம் சில நாய்கள் படுத்து உறங்குகின்றன. தூரத்தில் வரும் ஒரு கார் ஒரு நாய் உறங்குவதை பார்த்து விட்டு லேசாக ரிவர்ஸ் எடுத்து துல்லியமாக அந்த நாய் மீது காரை விட்டு ஏற்றி செல்கிறது.

இந்த வீடியோ விலங்கின ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.