இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், ஊரடங்கைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் வரும்அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஹோட்டல்கள் மூடப்படும் என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில், மத்திய அரசு இதை மறுத்துள்ளது.
மேலும், மத்திய அரசு இதுகுறித்து கூறியுள்ளதாவது, இந்தியாவில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஹோட்டள் மூடப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.