திமுக 38 இடங்களை வெல்லும்

திமுக 38 இடங்களை வெல்லும் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிட திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தோடு சேர்ந்து, நாடுமுழுவதும் 17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. வருகிற மே 23ம் தேதி 8 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என அறிவித்திருப்பதால், மோடியே மீண்டும் பிரதமராவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிக இடங்களை பிடிக்கும் என பெரும்பாலான தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுச்சேரியை தவர்த்து, மொத்தம் 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக 34 முதல் 38 இடங்களை கைப்பற்றும் எனவும், அதிமுக 0-4 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேபோல், பல செய்தி நிறுவனங்களும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.