3 தொகுதிகளில் இடைத்தேர்தல் : திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது

201

3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக ஒரு இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். எனவே, நங்குநேரி தொகுதி காலியாக உள்ளது.

அதேபோல், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். எனவே, இந்த 2 தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ‘நங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜன் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும். விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பாருங்க:  நிவேதா பெத்துராஜ் புதிய புகைப்படங்கள்