Entertainment
திமுக பேச்சாளருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி
அரசியல் ரீதியான விசயங்களில் மிகவும் ஆர்வமுடன் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு வருவார். அப்படியாக திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான சரவணன் அண்ணாதுரை என்பவர்( இவர் டிவி விவாதங்களிலும் பங்கேற்பவர்) வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும், ஆர்.எஸ்.எஸ். தலைவராக பிராமணர் அல்லாதோர் வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் பேசலாமா மற்ற இயக்கங்களை பற்றி .
ராஜாஜி தொடங்கி மமதா , ராகுல், பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் அரசியலே இல்லையே திமுகவிற்கு , அதை பேசுவீர்களா? என கேட்டுள்ளார்
