பள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ

216

DMK MLA pugzendhi controversy talk – மதுராந்தகம் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் முன்னிலையில் முதலிரவு பற்றி பேசிய திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி பலரையும் முகம் சுளிக்க வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி ‘நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றது இந்த பள்ளிகூடத்தில்தான். ஒரு பெண் வாழ்வில் ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும் அவருக்கு முதலிரவு என்பது மறக்க முடியது என சொல்வார்கள். அதுபோல், இந்த பள்ளியை என்னால் மறக்க முடியாது’ எனப்பேசினார்.

அவரின் பேச்சு அங்கிருந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

பாருங்க:  கோவிலில் எடுக்கப்பட்ட முத்தக்காட்சி- தபு மீது புதிய சர்ச்சை