Connect with us

உள்ளாட்சி தேர்தல்- கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேண்டும் என்றே போட்டியிட்ட 52 திமுகவினர் நீக்கம்

Latest News

உள்ளாட்சி தேர்தல்- கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேண்டும் என்றே போட்டியிட்ட 52 திமுகவினர் நீக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, கட்சியில் சீட் கிடைக்காத சிலர் போட்டியிடுகின்றனர்.
அவ்வாறு போட்டியிடுவோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு,நாகை தெற்கு, திருப்பூர் மத்தியமாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 52 பேர்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ
Continue Reading
You may also like...

More in Latest News

To Top