இடைத்தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கும் திமுக – ஆட்சி கவிழுமா?

234

தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருப்பது அதிமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கன தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எனவே, மொத்தம் 22 தொகுதிகளுக்காக சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களையும், அதிமுக 4 இடங்களை பிடிக்கும் எனவும், மீதமுள்ள 5 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு ஆளும் அதிமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சேர்த்து திமுகவுக்கு ஏற்கனவே 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தற்போது திமுகவின் பலம் மேலும் கூடினால் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு, திமுகவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக எம்.எல்.ஏக்களும் கூறி வரும் நிலையில், ஆட்சியை எப்படி தக்க வைப்பது என்கிற தீவிர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

பாருங்க:  மெல்ல திறந்தது கதவு ஹிட் படமா