இயக்குனர் பா. ரஞ்சித் தனது படத்தில் எளிய மக்களுக்கான சிந்தனைகளை விதைப்பவவர். அடிமைப்படுத்தப்பட்ட சிறுமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியல்களை தமது படங்களில் கதைக்களமாக வைத்து அதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் கதைகளை இயக்குபவர் இவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இவரது குரல் ஏதாவது ஒரு மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் ஆக்ரமிப்புகளை அகற்றுகிறேன் என சில குடிசைப்பகுதிகளை சென்னை, ஆர் ஏ புரம், மற்றும் கோவிந்தசாமி நகரில் அகற்றியதால் ஒரு முதியவர் தீக்குளித்தார்.
இதனை செய்திகள் மூலம் கேள்வியுற்ற இயக்குனர் பா. ரஞ்சித் திமுக அரசு மீது பாய்ந்துள்ளார். விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என ரஞ்சித் கேட்டுள்ளார்.