Connect with us

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்- திருநாவுக்கரசு

Latest News

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்- திருநாவுக்கரசு

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலை புலிகள் இயக்கத்தால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மரணமடைந்து விட்ட நிலையில், கொலைக்கு மறைமுகமாக உதவிய வழக்கில், நளினி, சாந்தன் , பேரறிவாளன், முருகன் , உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்பு அது ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர்கள் 30 ஆண்டுகளாகியும் சிறைவாசத்தை அனுபவித்து வருவதால் முதலில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு முக்கிய காரணமே திமுக தான் என கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரியும் கூட இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார் வாயில் துணி கட்டி கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி இதனால் பிரியும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள நாடாளுமன்ற எம்,பி திருநாவுக்கரசர் பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி தொடரும். எங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரித்துவிட முடியாது என கூறி உள்ளார்.

பாருங்க:  கோவிட் 19 மற்றும் அமானுஷ்யம் கலந்த திகில் படம்- ஜோம்பி ரெட்டி டீசர்

More in Latest News

To Top