stalin

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் அமைப்புகளும் உதவி செய்து வரும் நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் தனியாக மக்களுக்கு உணவு உள்பட எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தே இந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது. இது தமிழக அரசு மீது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் எதிராக மத்திய மற்றும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.