தோல்வியை சந்திக்கும் தேமுதிக சுதீஷ்

தோல்வியை சந்திக்கும் தேமுதிக சுதீஷ் – விஜயகாந்த் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

மக்களவை தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேசிய அளவில் பாஜக 344 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியே மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 5 பேரும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

அதேபோல், பாமக சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட  சுதீஷ், தென்காசி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி என அனைவரும் தோல்வி முகத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி 6,56,351 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில்,  சுதீஷ் 2,92,351 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் இருக்கிறார். ஏறக்குறைய 4 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் சுதீஷின் தோல்வி உறுதியாகியுள்ளது.

இது விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.