வாயால் இழந்த வாக்குவங்கி – மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக

326

கடந்த சில தேர்தலாகவே தேமுதிக பெறும் வாக்கு வங்கி அக்கட்சி தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011-2016ம் ஆண்டுவரை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்த கட்சி தேமுதிக. ஆனால், பொது இடத்தில் விஜயகாந்தின் செயல்பாடு, அவரது உடல்நிலை ஆகியவற்றால் தேமுதிக தனது சக்தியை இழந்தது.

மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக 02

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மரணத்திற்கு பிறகு உருவான் அரசியல் வெற்றிடத்தையும் தேமுதிக பயன்படுத்திக் கொள்ளவில்லை. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா செய்தியாளர்களை ஒருமையில் பேசியதையும், கீழ்த்தரமாக விமர்சித்து பேசியதும் மக்கள் ரசிகக்வில்லை.

அதேபோல், எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் எங்களின் ஆதரவு தேவை.. எங்கள் வீட்டு முன்பு நாய் போல் ஏன் வந்து காத்துக் கிடக்கிறீர்கள்? என விஜயகாந்தின் மகன் விஜய பிரபகாரன் பேசியதை அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை யாரும் ரசிக்கவில்லை.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் மக்கள் நலக்கட்சியுடன் அவர் கூட்டணி அமைத்து தேமுதிக கடும் தோல்வியை சந்தித்தது.

அதன்பின் விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமடைய தமிழக அரசியல் களத்தில் தேமுதிக என்கிற கட்சி இருக்கிறதா என்கிற சந்தேகமே எழுந்தது. அதன் பின் 2019 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேமுதிக உறக்கம் கலைத்து கூட்டணி பேரத்தை துவங்கியது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தலைவர்கள் அனைவரும் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தனர். ஆனால், வழக்கம் போல் யாருடன் கூட்டணி என அறிவிப்பதில் தேமுதிக அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது.

பாருங்க:  பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய ரஜினி...
மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக 01

இந்த முறையாவது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தது. அதையாவது உடனடியாக அறிவிக்காமல் கடைசி நேரத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் டீல் பேசி, அதை துரைமுருகன் பொதுவெளியில் தெரிவித்து தேமுதிகவின் இமேஜை காலி செய்தார்.

அதன்பின் நான்கு தொகுதியில் நின்று நான்கிலும் தேமுதிக தோல்வியை சந்தித்துள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் கூட வெற்றிபெறவில்லை.

தேமுதிகவின் வாக்குவங்கி 11ல் தொடங்கி 8க்கு வந்து தற்போது வாக்கு வங்கி அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும், குறைந்த பட்சம் 6 சதவீத வாக்குவங்கி மற்றும் 8  எம்.எல்.ஏக்கள் கூட இல்லாமல் மாநில கட்சி அந்தஸ்தையே தேமுதிக இழந்துள்ளது.

14 மாதங்களுக்கு முன்பு கட்சி தொடங்கிய கமல்ஹாசன் பெற்ற வாக்கு வங்கியை கூட தேமுதிக பெறவில்லை. தேமுதிகவின் வாங்கி வங்கியை மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை பெற்றுவிட்டன என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தேமுதிக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் இது!